கண்டில்லையோ? கவையில்லையோ?

கண்டில்லையோ? கவையில்லையோ?
ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ?
வையகமனைத்தும் அவர் சப்தம் பேச
உன்னையும் விரும்புகிறார்

1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார்
வாலிபர் தெருவில் மூர்ச்சையானார்
வயோதிகர் வகை தெரியாது போனார் – இன்று
வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ?

2. அடியவர் தியாகத்தை அணிந்துவிட்டால்
கொடியவர் தானாய்த் திருந்திடுவார்
அறியாமை உலகை மூடுவதேன் – என்
பொறுப்பை நான் மதியாததே – கண்டில்லையோ?

3. உலகத்தில் வெளிச்சம் வீசவேண்டி
பரலோகத் தந்தை ஆணையிட்டார்
நினைப்பவர் யாரோ உழைப்பவர் யாரோ
உதவுவார் யார் யாரோ? – கண்டில்லையோ?



kandillaiyo? kavaiyillaiyo?

kandillaiyo? kavaiyillaiyo?
aandavar azhaikkirar kedkalaiyo?
vaiyakamanaiththum avar sabdham pecha
unnaiyum virumbukirar

1. pillaikal abpam keddu nindrar
valipar theruvil murchaiyanar
vayothikar vakai theriyathu ponar – inru
vazhikaddi kirisadhavare – kandillaiyo?

2. adiyavar thiyakaththai aninththuviddal
kodiyavar thanayth thirunththiduvar
ariyamai ulakai muduvathen – en
poruppai nan mathiyadhathe – kandillaiyo?

3. ulakaththil velischam vachavendi
paralokath dhanththai aanaiyiddar
ninaibpavar yaro uzhaibpavar yaro
udhavuvar yar yaro? – kandillaiyo?